தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



samiraja 110 நாள் முன்பு (http://www.samscrutiny.in) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
வன்னியர் சங்கம் குறித்து செய்தி வெளியிட்ட, "தினமலர்' நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வன்னியர் சங்க மாநிலத் தலைவர், ஜெ.குரு, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.,வுமான, ஜெ.குரு இருவரும் நேற்று, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியைச் சந்தித்து, "தினமலர்' மீது புகார் கொடுத்தனர். குரு கையெழுத்திட்டு கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:நான் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளேன். வன்னியர் சங்கம், ராமதாசை நிறுவனராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது; வன்னியர் சமூகத்தின் கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் வன்னியர்கள் தனிப்பெரும் சமூகத்தினராக உள்ளனர்.