ஞானலயாவிற்கான ஸ்கேனர் முயற்சி | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



krishna54 235 நாள் முன்பு (http://www.gnanalaya-tamil.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்காக புதுக்கோட்டையில் ஒரு மருந்துக்கடை வைத்திருக்கும் லேனா என்று அழைக்கப்படும் இந்த நண்பர் ஒரு எளிய ஸ்கேனர் முன் மாதிரியைத் தானே வடிவமைத்திருக்கிறார்.

வெறும் பதினைந்து நாட்களில் ஒரு கார்பென்டரை உதவிக்கு வைத்துக் கொண்டு, திரு.லேனா இந்த முன்மாதிரியை உருவாக்கி இருக்கிறார்.மாதிரி ஸ்கேன்கள் நன்றாக, தெளிவாக இருக்கின்றன. இன்னமும் சில விஷயங்களை இணைக்க வேண்டும்.முக்கியமாக எல்ஈடி லைட்! இப்போது சென்னை மற்றும் பெருநகரங்களில் வாழ்கிற நண்பர்கள் பத்து வாட்ஸ் எல்ஈடி லைட் எங்கே கிடைக்கும், என்ன விலை என்பதைக் கொஞ்சம் விசாரித்துச் சொல்லி இந்த வேலையில் உதவ முடியும்.