பீட்சா : துணிச்சலான பயமுறுத்தல் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilraja 207 நாள் முன்பு (http://tamilraja-thotil.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
நான் இந்தப் படத்தை முதல் நாளேப் பார்த்துவிட்டேன். இருப்பினும் அதைப் பற்றி எழுத இப்பொழுது தான் நேரம் கிடைத்தது. அதான் ஒரு வாராமா நிறைய படித்துவிட்டோமே நீ என்ன மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு இங்கே நான் சொல்லிக் கொள்வது இது விமர்சனமல்ல… இது ஒரு விவாதம்.
பீட்சா இந்தப் படத்தை பற்றித் தான் இன்று நிறைய ரசிகர்கள் பேசுகிறார்கள். சினிமா வட்டாரத்திலும் இதைப் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. பீட்சா எப்படி இருக்கு என்று ஒருவரிடம் அந்தக் கதையைப் பற்றிக் கேட்டாலும் முதலில் அதை சென்றுப் பார்த்துவிட்டு வாருங்கள். கதைக் கேட்டால் உங்களுக்கு பார்க்க பிடிக்காது என்று தான் சொல்கிறார்கள். திரைத்துறையினரோ, குறும்படத்தின் கதையை வெகு அழகாக சொல்லிவிட்டார் என்று சொல்கிறார்கள். மொத்தத்தில் இந்தப் படத்தைப் பற்றிய பிரமிப்பு எல்லோரிடமும் இருக்கிறது.